search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி நகர் தொகுதி"

    பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தலைவர் அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் சுமார் 350 தொகுதிகளில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    அவ்வகையில், பிற்பகல் 3 மணிவரை நிலவரப்படி உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி 4 லட்சத்து 41 ஆயிரத்து 59     வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 87 ஆயிரத்து 338 வாக்குகளை பெற்றார். அங்கு சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றிமுகம் காட்டி வருகிறார்.



    இதேபோல், குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா 8 லட்சத்து 21 ஆயிரத்து 705 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சி.ஜே.சாவ்டா 3 லட்சத்து 20 ஆயிரத்து 136 வாக்குகளை பெற்று பின்தங்கியுள்ளார். 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றிமுகம் காட்டி வருகிறார்.
    குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித் ஷா, இன்று பேரணியாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #AmitShah #LokSabhaElections2019
    காந்திநகர்:

    பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்த அமித் ஷா, இன்று காலை அகமதாபாத் வந்தார். அங்கு சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கூட்டணியின் செல்வாக்கை காட்டும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமித் ஷாவுடன் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.



    இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.  #AmitShah #LokSabhaElections2019
    ×